செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மாதகலில் மீனவர் இளைப்பாறு மண்டபம் திறந்துவைப்பு!

Posted: 2016-04-29 06:35:26 | Last Updated: 2016-04-29 06:36:26
மாதகலில் மீனவர் இளைப்பாறு மண்டபம் திறந்துவைப்பு!

மாதகலில் மீனவர் இளைப்பாறு மண்டபம் திறந்துவைப்பு!

மீள்குடியேறிய மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையமானது பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் USAID நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் மாதகல் சம்பில்துறையில் ரூபா. 2.4 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவர்களுக்கான இளைப்பாறு மண்டபம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.பி.செந்தில்நந்தன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மீனவர்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது.

இதன் மூலம் புனித சூசையப்பர் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் உதயதாரகை கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களுடன் சம்பில்துறையில் தொழில் புரியும் அனைத்து மீனவர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.