செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கபாலி டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை!

Posted: 2016-05-05 06:13:58 | Last Updated: 2016-05-05 06:16:12
கபாலி டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை!

கபாலி டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை!

லிங்கா படத்தையடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் கபாலி. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்துடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கபாலி படத்தின் டீசர் சென்னையில் மே 1 அன்று வெளியானது. காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியான கபாலி டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்தது. ரஜினியின் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் கபாலி பட டீசரை பகிர்ந்தார்கள். ராம்கோபால்வர்மா, ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்களும் கபாலி படத்தின் டீசரை பாராட்டி தங்களது கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.

டீசர் வெளியிட்ட 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்தது சாதனையாகக் கருதப்பட்டது. இந்திய அளவில் எந்தவொரு நடிகருக்கும் இல்லாத வரவேற்பு.

இந்நிலையில், கபாலியின் டீசர், 1 கோடி பார்வைகளைக் (Views) தற்போது கடந்துள்ளது. இந்திய அளவில் வேறு எந்தப் படத்தின் டீசரும் 4 நாள்களில் 1 கோடி பார்வைகள் என்கிற எண்ணிக்கையைத் தொட்டதில்லை என்பதால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது கபாலி டீசர்.