செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சூர்யாவின் '24' மூன்று நாள்களில் 15.96 கோடி ரூபா வசூலித்தது!

Posted: 2016-05-10 02:22:20 | Last Updated: 2016-05-10 02:36:40
சூர்யாவின் '24' மூன்று நாள்களில் 15.96 கோடி ரூபா வசூலித்தது!

சூர்யாவின் '24' மூன்று நாள்களில் 15.96 கோடி ரூபா வசூலித்தது!

சூர்யா நடித்துள்ள 24 படம் அமெரிக்காவில் மூன்றே நாள்களில் 10 இலட்சம் டொலர் வசூலித்து சாதனை செய்துள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துள்ள படம், 24. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

வெளிநாடுகளிலும் 24 படத்தின் வசூல் அதிக கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் 24 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வெளியான மூன்றே நாள்களில் அமெரிக்காவில் 10 இலட்சம் டொலர் வசூலித்து சாதனை செய்துள்ளது. அதாவது 3 நாள்களில் இலங்கை ரூபா மதிப்பில் சுமார் 15.96 கோடி ரூபா வியாழனன்று நடைபெற்ற சிறப்புக் காட்சியின் வசூலும் இதில் அடங்கும்.

அமெரிக்காவில் இதுவரை வெளியான சூர்யா படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமை 24 படத்துக்குக் கிடைத்துள்ளது. சினிகேலக்ஸி நிறுவனம் அங்கு இப்படத்தை விநியோகம் செய்துள்ளது.

இதற்கு முன்பு இதுபோன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் ஹிந்திப் படங்களுக்கு பஞ்சாபி படங்கள்தான் அதிக போட்டி அளிக்கும். இப்போது தமிழ்ப் படங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளதாக சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.