செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை - சமந்தா!

Posted: 2016-05-10 03:04:44
புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை -  சமந்தா!

புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை - சமந்தா!

கடந்த 8 மாதங்களாக ஓய்வில்லாமல் நடித்ததால் சிறிது காலத்துக்குப் புதிய படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சமந்தா நடித்த தெறி, 24 ஆகிய தமிழ்ப் படங்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டுமே சுப்பர் ஹிட் படங்களாகியுள்ள நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடைக் காலத்தின் கடைசிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வினால் மிகவும் முடியாமல் போன நாள்கள் உண்டு. எப்படியோ அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி.

இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பராக, கேர்ள்ஃபிரண்டாக இல்லை. இதைச் சரிகட்ட, இனி வேகமாக எதையும் செய்யப்போவதில்லை. சிறிது காலத்துக்கு எந்தவொரு புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.