செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ரஜினியின் கபாலி ஜூலை 7 இல் வெளியாகும்?

Posted: 2016-05-11 22:56:34
ரஜினியின் கபாலி ஜூலை 7 இல் வெளியாகும்?

ரஜினியின் கபாலி ஜூலை 7 இல் வெளியாகும்?

ரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையை சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கபாலி படத்தின் டீசர் சென்னையில் மே முதலாம் திகதி வெளியானது. காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியான கபாலி டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்தது.

ரஜினியின் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் கபாலி பட டீசரை பகிர்ந்தார்கள். டீசர் வெளியிட்ட 24 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்தது சாதனையாகக் கருதப்பட்டது. பிறகு, அந்த டீசர், 1 கோடி பார்வைகளைக் (Views) கடந்தது.

இந்திய அளவில் வேறு எந்தப் படத்தின் டீசரும் 4 நாள்களில் 1 கோடி பார்வைகள் என்கிற எண்ணிக்கையைத் தொட்டதில்லை என்பதால் புதிய சாதனையை நிகழ்த்தியது கபாலி டீசர்.

கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி. பின்னணி இசை உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்தை எப்போது வெளியிடலாம் என்பது குறித்த சில ஆலோசனைகள் தானுவை யோசிக்க வைத்துள்ளன.

ஜூலை முதலாம் திகதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் தானு முதலில் திட்டமிட்டார் எனத் தெரிகிறது. ஆனால் அந்தக் காலட்டம் ரம்ழான் நோன்பு காலம் என்பதால் படத்தை ஒரு வாரம் தள்ளி வெளியிட மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தானுவுக்கு வேண்டுகோள் வந்துள்ளது.

ரம்ழான் நோன்பு காலம் ஜூன் 6 முதல் ஜூலை 5 வரை என்பதால், ஜூலை 7 ஆம் திகதி படத்தை வெளியிடுமாறு வெளிநாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இன்றைய நிலவரப்படி கபாலி, ஜூலை 7 ஆம் திகதி வெளியாக வாய்ப்புண்டு என்று படக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.