செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நடிகை சமந்தா இளம் நடிகருடன் திருமண பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார்!

Posted: 2016-05-23 13:13:31 | Last Updated: 2016-05-24 05:51:21
நடிகை சமந்தா இளம் நடிகருடன் திருமண பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார்!

நடிகை சமந்தா இளம் நடிகருடன் திருமண பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார்!

இளம் நடிகர் ஒருவரை தாம் காதலித்து வருகிறார் என்றும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்றும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.

அந்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமண திகதியை அறிவிக்கும்போது சொல்வேன்.

என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன். என் வருங்கால கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

எனக்கு சமைக்கத் தெரியாது. ஆனால் என் காதலருக்கு நன்கு சமைக்கத் தெரியும். நான் கோபத்துடன் பேசுவேன். அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் அவர் மிகவும் சாந்தமாக இருப்பார். மிகவும் பொறுமைசாலி. சமூகசேவைகளில் ஆர்வமாக இருப்பார். அதனால்தான் நான் அவரைக் காதலித்தேன் என்று சமந்தா கூறியுள்ளார்.