செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 2016-05-31 06:27:16
சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள ஆரையம்பதியில் இடம்பெற்றது.

மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலக திவிநெகும திணைக்கள உத்தியோகத்தார்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் பாலமுனை சந்தியிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக பிரதேச செயலகம் வரை சென்றது.

பாடசாலை மாணவர்கள், கிராமச் சங்கங்களின் அங்கத்தினர்கள், பிரதேச செயலக ஊழியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

புகைத்தல் மற்றும் மதுப்பாவனையால் சமூகத்தினர் எதிர் கொள்ளும்; தீங்குகள்; பற்றிய வாசகங்களை ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.