செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் நிழல்தரு மரங்கள் நடுகை!

Posted: 2016-06-05 04:49:49 | Last Updated: 2016-06-05 04:53:13
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் நிழல்தரு மரங்கள் நடுகை!

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் நிழல்தரு மரங்கள் நடுகை!

உலக சுற்றாடல் தினமானது கடந்த வருடத்திலிருந்து தேசிய சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில், யாழ்ப்பாணத்திலும் மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிழல் தரும் மரங்களை நாட்டுவதாக திட்டமிடப்பட்டது.

இன்று ஞாயிற்றக்கிழமை யாழ் சமூக செயற்பாட்டு மையம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துடன் இணைந்து பல்வேறுபட்ட நிழல் தரும் மரங்களை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து மாவிட்டபுரம் வரையிலான வீதி ஓரங்களில் நாட்டியுள்ளது. RDA இன் ஆலோசனையின் கீழ் மரங்கள் நாட்டப்படும் இடங்கள் தீர்மானிக்கப்பட்டு அவை உச்ச பயனை கொடுக்கும் வகையில் நடடப்பட்டுள்ளன. மேலும், மரங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பாதுகாப்பு கூடுகளும் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் இந்தநிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலர் ஸ்ரீமோகனின் தலைமையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சுகிர்தராஜ், RDA இன் சிரேஷ்ட பொறியியலாளர் மற்றும் கிராம சேவகர்கள் ஒரே தருணத்தில் மரக்கன்றுகளை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் முன்பாக நட்டு வைத்ததுடன் ஆரம்பமானது.