செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

LAVA Nursing Institute வழங்கும் மருத்துவக் கற்கைநெறிகள்

Posted: 2016-06-07 12:00:44
LAVA Nursing Institute வழங்கும் மருத்துவக்   கற்கைநெறிகள்

LAVA Nursing Institute வழங்கும் மருத்துவக் கற்கைநெறிகள்

யாழ்ப்பாணம் லாவா வைத்தியசாலையின் இணை நிறுவனமான LAVA Nursing Institute எனும் நிறுவனத்தால் நடத்தப்படும் மருத்துவக் கற்கை நெறிகள் குறித்தும் அதன் நன்மைகள் தொடர்பாகவும் அதன் இயக்குநர் Dr.யோ.யதுநந்தனன் வழங்கிய கருத்துக்கள் வருமாறு:-

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 வருடங்களான இயங்கி வருகிறது Lava hospital எனும் தனியார் வைத்தியசாலை. LAVA Nursing Institute என்பது இதன் இணை நிறுவனம் ஆகும். இதில் கடந்த 7 வருடங்களாக மருத்துவ கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றது. இதில் பிரபல்யமானது மருத்துவ உதவியாளர் பயிற்சி நெறி ஆகும்.

மருத்துவ உதவியாளர் பயிற்சி நெறி (Certified medical assistant ) என்பது குறுகிய கால தாதியர் பயிற்சி ஆகும். வெளி நாடுகளில் இந்த பெயர் பிரபல்யமானது. இது க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பெறுபேறு காணாதவர்களுக்காக நடத்தப்படுகின்றது. அவர்களையும் முன்னேற்ற வேண்டும் மற்றும் கவர்ச்சியான சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை தனியார் வைத்திய துறையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனனே மேற்படி கற்கை நெறி கற்பிக்கப்படுகின்றது இதற்குரிய பயிற்சி கட்டணமாக ரூபா 17 000/= மட்டும் அறவிடப்படுகின்றது.

இந்தக் கற்கை நெறியைக் கற்பதன் மூலம் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆய்வு கூடங்கள். இதை விட சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், வைத்திய சாலைகளில் நாளாந்த நோயாளர் பராமரிப்பு போன்றனவற்றில் நல்ல சம்பளத்துடன் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கின்றத. அத்துடன் வெளிநாடுகளிலும் சிறந்த வேலை வாய்ப்பைப் பெறக்கூடியதாக உள்ளது.

வட மாகாணத்தில் அரசாங்க வைத்திய சாலைகளில் ஆகக் குறைந்தது 1,500 தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தனியார் வைத்திய துறையில் பயிற்சி பெற்ற தாதியர் இல்லை எனும் அளவுக்கு நிலமை உள்ளது. பல்வேறு வைத்திய துறைகளிலும் எந்த ஒரு அடிப்படை பயிற்சியும் அற்ற பெண் பிள்ளைகளே வேலை செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அடிப்படை பயிற்சி பெற்ற பிள்ளைகள் மூலம் இதை பெருமளவு தவிர்த்து கொள்ளலாம்.

பின் தங்கிய இடங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு கருத்தரங்குகள், முதலுதவி, மருந்து கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் 3000 இற்க்கும் அதிகம். இவ்வாறான வறுமை கோட்டிற்குட்பட்ட பெண் பிள்ளைகள் படிப்பதற்கு வெளிநாடுகளில் வசிப்போர் உதவி செய்தால் அப்பிள்ளை கெளரவமான தொழில் செய்வதற்கும் அக் குடும்பத்திற்கும் வாழ் நாள் பேருதவியாக அமையும்.

'பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே' நீண்ட கால நோக்கில் எமது சமுதாயத்துக்கு பயனுள்ளதாக அமையும். - என்றார்.