செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஷரபோவாவுக்கு இரு ஆண்டு தடை! மேன்முறையீடு செய்கிறார்!!

Posted: 2016-06-08 21:58:22 | Last Updated: 2016-06-08 22:01:03
ஷரபோவாவுக்கு இரு ஆண்டு தடை! மேன்முறையீடு செய்கிறார்!!

ஷரபோவாவுக்கு இரு ஆண்டு தடை! மேன்முறையீடு செய்கிறார்!!

உலகின் முன்னிலை ரென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரிய ஷரபோவாவுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமைக்காகவே இந்தத் தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ரென்னிஸ் தொடருக்குப் பின்னர் அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெல்டோனியம் பயன்படுத்தியமை தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் மாதம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு எதிராகத் தொடர்ந்து நடந்த விசாரணையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டது.

எனினும் இந்தத் தடைக்கு எதிராக ஷரபோவா மேன்முறையீடு செய்யப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார்.