செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பழம் பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்!

Posted: 2016-06-15 11:35:59 | Last Updated: 2016-06-15 11:37:14
பழம் பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்!

பழம் பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவகுமார் என்று முந்தைய தலைமுறை நாயகர்களை வைத்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். சினி பாரத் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.

'அன்பே வா', 'டாக்டர் சிவா', 'தெய்வமகன்', 'பாரதவிலாஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய திருலோசந்தர், எம்.ஜி.ஆர். நடித்து 1952ஆம் ஆண்டு வெளியான 'குமாரி' படத்தில்தான் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். கடைசியாக சிவாஜி, நதியாவை வைத்து 'அன்புள்ள அப்பா' படத்தை இயக்கினார். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் நான்கைந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த திருலோகசந்தருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. அவரது மனைவி 2010ம் ஆண்டு 72 வது வயதில் காலமானார்.