செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முக சருமத்தை 'செல்பி' பாதிக்கும்! பிரிட்டன் மருத்துவர் எச்சரிக்கை!!

Posted: 2016-06-19 23:38:02
முக சருமத்தை 'செல்பி' பாதிக்கும்! பிரிட்டன் மருத்துவர் எச்சரிக்கை!!

முக சருமத்தை 'செல்பி' பாதிக்கும்! பிரிட்டன் மருத்துவர் எச்சரிக்கை!!

கைபேசிகளில் 'செல்பி' எடுப்பது முக சருமத்துக்கு கேடு விளைவிக்கலாம் என பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

'செல்பி' எடுப்பது இப்போது பெரும் மோகமாக மாறிவிட்டது. இதனால் ஆபத்தான இடங்களில் நின்று 'செல்பி' எடுத்தவர்கள் பலர் உயிரிழந்திருந்தனர்.

ஆனால் சாதாரணமாக செல்பி எடுப்பது உயிரைப் பறிக்காவிட்டாலும், முகச் சருமத்தின் பொலிவை இழக்கச் செய்துவிடும் என எச்சரிக்கிறார் பிரிட்டனின் பிரபல சரும இயல் மருத்துவர் சைமன் ரஸாவாக்கி.

இது குறித்து அவர் தெரிவித்தவை வருமாறு:

'செல்பி' எடுத்து உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்வது இப்போது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. வலைப்பூ, சமூக வலைதளங்களில் ஒரே நாளில் பல முறை தங்களையே 'செல்பி' பிடித்து பதிவு செய்பவர்கள் ஏராளம்.

கைபேசிகளில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் பொதுவாகவே நமது மரபணுக்களில் காலப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. அவ்வப்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்து கொள்ளும் திறன் சரும மரபணுவுக்கு உள்ளது.

ஆனால், தொடர்ந்து அதிக அளவிலான மின்காந்த அலைகள் வெளிப்படும்போது பாதிப்படையும் நம் சருமம் அதனை சீர் செய்து கொள்வதற்கான கால அவகாசம் இருப்பதில்லை.

இதனால் வேகமாக மாறுதலுக்கு உள்ளாகும் சருமம் திரும்பவும் பழைய நிலைக்கு வருவது இயலாமல் போகிறது. இதைத் தொடர்ந்து முகத்தில் சுருக்கம், கோடு ஏற்படுகிறது.

கைபேசி திரையிலிருந்து வெளிப்படும் நீல ஒளியும் நமது சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது - என்றார்.

அடிக்கடி 'செல்பி' எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் இனி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!