செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வரலாற்று தோல்வியும் வரலாற்று வெற்றியும்!

Posted: 2016-06-28 22:25:10
வரலாற்று தோல்வியும் வரலாற்று வெற்றியும்!

வரலாற்று தோல்வியும் வரலாற்று வெற்றியும்!

யூரோ கிண்ண உதைபந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஐஸ்லாந்து அணி.

இதன்மூலம், உதைபந்தாட்ட வரலாற்றில் இத்தகைய தோல்வியை இங்கிலாந்து அணியும், இத்தகைய காலிறுதி வாய்ப்பை ஐஸ்லாந்து அணியும் சந்தித்தமை இதுவே முதல் முறையாகும்.

இந்தத் தோல்வியின் மூலம் யூரோ கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு குறைந்துள்ளது. முன்னதாக, ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் ராய் ஹாட்க்ஸன் அணியில் 6 மாற்றங்களை மேற்கொண்டிருந்தார். எனினும், அந்த முயற்சியும் கைகொடுக்காமல் போனது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோலை முத்தமிட இரு அணி வீரர்களுமே கடுமையாக விளையாடினர்.

எதிர்பார்த்தது போலவே, முதல் கோல் வாய்ப்பை தனதாக்கிக் கொண்டது இங்கிலாந்து அணி. ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் கப்டன் ரூனி.

எதிர்பாராத விதமாக, அடுத்த 2 நிமிடங்களிலேயே அதற்குரிய பதிலடியை ஐஸ்லாந்து கொடுத்தது. ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ராக்னர் சிகரோஸன் ஒரு கோல் அடித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆட்டத்தின் 18 ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் கால்பெய்ன் சிக்போர்ஸன் ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் பாதி நேரத்துக்கு முன்பாகவே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஐஸ்லாந்து அணி.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணிக்கு கோல் வாய்ப்புகள் கிடைக்க விடாமல் செய்த ஐஸ்லாந்து அணி, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அந்தச் சுற்றில், யூரோ கிண்ணப் போட்டியை நடத்தும் பிரான்ஸ் நாட்டின் அணியை எதிர்கொள்கிறது ஐஸ்லாந்து அணி.

விலகல்: இந்நிலையில், ஐஸ்லாந்துக்கு எதிரான தோல்வியை அடுத்து, இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராய் ஹாட்க்ஸன் விலகினார்.

சாதனை சமன்: இந்த ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்காக 115ஆவது முறையாக களமிறங்கிய அதன் கப்டன் ரூனி, சர்வதேச அளவில் 53ஆவது கோல் அடித்து டேவிட் பெக்காமின் சாதனையை சமன் செய்தார்.