செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்! (படங்கள்)

Posted: 2016-06-29 00:51:56 | Last Updated: 2016-06-29 00:58:25
சுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்! (படங்கள்)

சுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்! (படங்கள்)

சுறாவின் மரணப் பிடியில் இருந்து சீல் ஒன்று தப்பிக்கும் அற்புத தருணங்களை படம் பிடித்திருக்கிறார் தென்னாபிரிக்காவின் புகைப்படவியலாளரான பிரண்டன் கில்பிரைட்.

கேப்ரவுனுக்கு அருகில் உள்ள சீல் தீவு கடலிலேயே இந்தக் காட்சியை அவர் படமாக்கியுள்ளார்.

அவர் கடலில் படகு ஒன்றிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்த போது வெள்ளை சுறா ஒன்று சீல் ஒன்றை பிடிப்பதற்காக தண்ணீரை கிழித்துக் கொண்டு பாய்ந்துள்ளது.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பத்தால் அதிர்ச்சியடைந்த அவர் அக்காட்சியை சுமார் 25 மீற்றர் தொலைவில் இருந்து கச்சிதமாக புகைப்படங்களாக்கினார்.

வெள்ளை சுறா சீலை பிடிக்க முயன்ற போதும் அது குத்துக் கரணம் அடித்து சுறாவுக்கு நீண்டதூரத்துக்கு 'டிமிக்கி' காட்டி தப்பித்துக் கொண்டது.