செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வவுனியாவில் நூல் அறிமுக விழா

Posted: 2016-07-21 11:32:25 | Last Updated: 2016-07-21 11:32:50
வவுனியாவில் நூல் அறிமுக விழா

வவுனியாவில் நூல் அறிமுக விழா

திருமலை, கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ நூல்அறிமுக விழா வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் எதிர்வரும் 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகரும் செயலாளருமான தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராஜா, செந்தில்நாதன் மயூரன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராசா, வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீரசிங்கம் பிரதீபன் ஆகியோரும் கலந்துகொள்வர்.

மங்கள விளக்கினை ஆ.அம்பிகைபாகன் - தர்மினி தம்பதி ஏற்றிவைக்க தமிழ் வாழ்த்தினை திருமதி பராசக்தி ஜெகநாதன் பாடுவார். வாழ்த்துரையை வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் செயலாளர் சிவ.கஜேந்திரகுமார் நிகழ்த்துவார். தலைமையுரையினைத் தொடர்ந்து அறிமுகவுரையினை கவிச்சிகரம் .கி.உதயகுமார் வழங்குவார். நூல் வெளியீடு,சிறப்புப் பிரதிகள் வழங்கலைத் தொடர்ந்து தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) நூல் ஆய்வுரை நிகழ்த்த நூலாசிரியர், கவிச்சுடர் சிவரமணியின் ஏற்புரையையடுத்து, சிறப்பு நிகழ்வாக “பேசாப் பொருட்கள் பேசிடத் துணிந்தால்” என்னும் பொருளில் கவியரங்கம், கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமையில் இடம்பெறும்.