செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முல்லை மாவட்ட மாணவர்கள் 45 பேருக்கு சைக்கிள்களை வழங்கிய யாழ்.இந்துவின் மைந்தர்கள்

Posted: 2016-07-25 05:39:01 | Last Updated: 2016-07-25 05:39:27
முல்லை மாவட்ட மாணவர்கள் 45 பேருக்கு   சைக்கிள்களை வழங்கிய யாழ்.இந்துவின் மைந்தர்கள்

முல்லை மாவட்ட மாணவர்கள் 45 பேருக்கு சைக்கிள்களை வழங்கிய யாழ்.இந்துவின் மைந்தர்கள்

யாழ்.இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகளுக்கு 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கடந்த 3 வருடங்களாக யாழ் இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப் பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள் மொத்தமாக பத்தொன்பது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

அதன் அடுத்த கட்டமாக மேமாதம் 13ஆம் திகதி அம்பலவன்பொக்கணை அ.த.க பாடசாலையில் ஒரு மாணவனுக்கும் கொக்கிளாய் அ.த.க.பாடசாலையில் ஒன்பது மாணவர்களுக்குமாக மொத்தம் பத்து சைக்கிள்களும் கொக்கிளாய் அ.த.க பாடசாலைகு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகளுக்கு 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

மு/உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவர்கள் 11 பேருக்கும், மு/உடையாரகட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 8 பேருக்கும், மு/அம்பலவன்பொக்கணை மகாவித்தியாலய மாணவர்கள் 7 பேருக்கும், மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் 5பேருக்கும் மு/செம்மலை மகாவித்தியாலய மாணவர்கள் 5 பேருக்கும் மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை 4 பேருக்கும், மு/கோட்டை கட்டி அ.த.க பாடசாலை மாணவர்கள் 5 பேருக்குமாக மொத்தம் 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

முல்லை வலய கல்விப்பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் 2005 யாழ் இந்துவின் மைந்தர்களும் கலந்து கொண்டனர் .