செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தெல்லிப்பழை வைத்தியசாலையில் நலன்புரிசங்கத்தால் சிற்றுண்டிச்சாலை அமைப்பு!

Posted: 2016-07-26 10:52:54 | Last Updated: 2016-07-26 10:53:19
தெல்லிப்பழை வைத்தியசாலையில் நலன்புரிசங்கத்தால் சிற்றுண்டிச்சாலை அமைப்பு!

தெல்லிப்பழை வைத்தியசாலையில் நலன்புரிசங்கத்தால் சிற்றுண்டிச்சாலை அமைப்பு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ அமைப்பினதும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினதும் நிதிப் பங்களிப்பில் அதி நவீன உயர்தர உணவகம் அமைக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் திறந்துவைக்கப்பட உள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும் நோயாளர் நலன்புரிச் சங்கத் தலைவருமாகிய வைத்தியர் க.இளங்கோஞானியர் தலைமையில் நடைபெறும் மேற்படி விழாவில், அமெரிக்கா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உப தலைவர் வைத்திய கலாநிதி திருமதி ராஜம் தெய்வேந்திரம் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் க.நந்தகுமாரன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் நோயாளர் நலன்புரிச் சங்க ஆலோசகருமாகிய வைத்தியர் மு.உமாசங்கர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் ஆசியுரையை துர்க்கா துரந்தரர், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனும், வரவேற்புரையை தாதிய பரிபாலகர் சோ.இராசேந்திரனும், நன்றியுரையை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரனும் வழங்குவர். கட்டட ஒப்பந்தகாரர் கௌரவிப்பும் நடைபெற உள்ளது.