செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அம்பாறை, நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகம் யாழ்ப்பாணம் வருகை

Posted: 2016-08-09 10:47:16
அம்பாறை, நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகம் யாழ்ப்பாணம் வருகை

அம்பாறை, நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகம் யாழ்ப்பாணம் வருகை

அம்பாறை மாவட்டத்தில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் திட்டக் கிராமமான நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகத்தினர் இரண்டு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

வேல்ட் விஷன் நிறுவன வலி.மேற்கு திட்ட வளவாளர் வி.வென்சஸ், நாவிதன்வெளி திட்ட வளவாளர் ஆர்.சதீஸ் ஆகியோர் தலைமையில் அழைத்துவரப்பட்ட இந்தச் சிறுவர் கழகத்தினர் இன்று பொன்னாலை பாபுஜி முன்பள்ளிக்கு நட்புமுறைப் பயணத்தை மேற்கொண்டனர். இந்த முன்பள்ளியில் இவர்கள் சிரமதானப் பணி ஒன்றையும் முன்னெடுத்தனர்.

இதைவிட, அராலியில் உள்ள சிறுவர் கழகங்களுடன் சிறுவர் உறவுப் பரிமாற்ற நிகழ்வுகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இன்று மதியம் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி நாவிதன்வெளி சிறுவர் கழகத்தினர் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவுள்ளனர்.

வேல்ட் விஷன் நிறுவனம் கடந்த காலத்தில் வடக்கு – கிழக்கின் பல மாவட்டங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தது. தற்போதும் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அபிவிருத்திகளுக்கு மேலாக, நாட்டின் எதிர்கால சிற்பிகளான சிறுவர்களை சிறந்த ஆளுமையுடையவர்களாக உருவாக்குவதற்காக இந்த நிறுவனம் தற்போது சிறுவர்களுக்கான பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.