செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

Posted: 2016-08-09 11:25:56
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75.

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது.

இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார். பஞ்சு அருணாசலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.