செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மீளக்குடியமர்ந்த மக்களுக்கு யாழ். சமூக செயற்பாட்டு மையத்தால் பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

Posted: 2016-08-10 08:00:08 | Last Updated: 2016-08-10 08:02:05
மீளக்குடியமர்ந்த மக்களுக்கு யாழ். சமூக செயற்பாட்டு மையத்தால் பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

மீளக்குடியமர்ந்த மக்களுக்கு யாழ். சமூக செயற்பாட்டு மையத்தால் பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

யாழ்.சமூக செயற்பாட்டு மையம் மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் USAID நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று புதன்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பலாலி தெற்கு, வசாவிளான் கிழக்கு, வறுத்தலைவிளான், பளை வீமன்காமம் பகுதிகளில் 11.4 மில்லியன் பெறுமதியான 94 நிரந்தர மலசலகூடங்கள் மற்றும் கொல்லன்கலட்டி, மாவிட்டபுரம், வசாவிளான் கிழக்கு, பலாலி தெற்கு, இளவாலை வடக்கு, வித்தகபுரம், அளவெட்டி மேற்கு, மற்றும் தெல்லிப்பழை கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள 34 குடும்பங்களுக்கு 7.1 மில்லியன் பெறுமதியான முந்திரிகை கன்றுகள், தூண்கள், பாதுகாப்பு வலைகள், இயற்கை உரங்கள், பந்தலுக்கான கம்பிகள் உள்ளிட்ட முந்திரிகை செய்கைக்கு தேவையான உள்ளீடுகள் தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டன.

மேலும், சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கெங்காதேவி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த 24 பயனாளிகளுக்கான 7.5 மில்லியன் பெறுமதியான படகு, வெளியிணைப்பு இயந்திரம், வலைகள், பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் சங்கானை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக USAID நிதி நிறுவனத்தின் Director of Program and Policy Support Ms. Elizabeth Davnie – Eston, அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலர் பா.ஜெயகரன், சங்கானை பிரதேச செயலர் ஏ.சோதிநாதன்.USAID நிதி நிறுவனத்தின் Development Program Specialist Sunera Schaller,Development Program Assistant Ms. Solita Muthukrishna ஆகியோரும் கலந்துகொண்டனர்.