செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

10,000 மீற்றர் ஓட்டம்: எதியோப்பிய வீராங்கனை சாதனையுடன் தங்கம்!

Posted: 2016-08-13 01:02:18
10,000 மீற்றர் ஓட்டம்: எதியோப்பிய வீராங்கனை சாதனையுடன் தங்கம்!

10,000 மீற்றர் ஓட்டம்: எதியோப்பிய வீராங்கனை சாதனையுடன் தங்கம்!

ரியோ ஒலிம்பிக் மகளிர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் எதியோப்பிய வீராங்கனை அல்மாஸ் அயானா உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் ரியோ ஒலிம்பிக் தடகளத்தில் முதல் தங்கம் வென்றவர் என்ற பெருமை அயானா வசமானது.

ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் பதக்கப் போட்டியான மகளிர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் அல்மாஸ் அயானா 29 நிமிடம், 17.45 விநாடிகளில் இலக்கை எட்டினார்.

இதன் மூலம் புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக 1993 இல் பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் வாங் ஜூங்ஸியா 29 நிமிடம், 31.78 விநாடிகளில் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது. அந்த 23 ஆண்டுகால சாதனையை இப்போது 24 வயது அயானா தகர்த்துள்ளார்.

அயனாவுக்கு அடுத்தபடியாக கென்யாவின் விவியன் செரியாத் (29:32.53) வெள்ளி வென்றார். நடப்பு ஒலிம்பிக் சம்பியனான எதியோப்பியாவின் டிருனேஷ் டிபாபாவுக்கு இந்த முறை (29:42.56) வெண்கலப் பதக்கமே கிடைத்தது.