செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பாடலாசிரியர் முத்துக்குமார் காலமானார்!

Posted: 2016-08-14 07:10:08 | Last Updated: 2016-08-14 07:14:15
பாடலாசிரியர் முத்துக்குமார் காலமானார்!

பாடலாசிரியர் முத்துக்குமார் காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (வயது 41), உடல் நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார், சிகிச்சை பலனிற்றி இன்று காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற நோக்குடன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்து, சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 1,500இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக 2012ஆம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார். கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, புதுப்பேட்டை, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி, காக்காமுட்டை, தெறி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வரும் பாடல்கள் எழுதினார். இந்தப் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.

'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2005இல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), அனா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

1975ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார்.

நா.முத்துக்குமார் - தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் என்ற 9 வயது மகனும், யோகலஷ்மி என்ற 8 மாத பெண்குழந்தையும் உள்ளனர்.

தமிழ் திரையுலகத்தினரிடையே இவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது பூதவுடவுலக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.