செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஆஸியை வென்றது இலங்கை! பந்து வீச்சில் ஹேரத் அபாரம்!!

Posted: 2016-08-17 12:45:26 | Last Updated: 2016-08-18 13:35:43
ஆஸியை வென்றது இலங்கை! பந்து வீச்சில் ஹேரத் அபாரம்!!

ஆஸியை வென்றது இலங்கை! பந்து வீச்சில் ஹேரத் அபாரம்!!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே கொழும்பில் நடைபெற்ற முன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு. எஸ்.எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியின் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 355 ஓட்டங்களை எடுத்தது. அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் சந்திமால் 132 ஓட்டங்களையும், தனஞ்சய சில்வா 129 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 7 விக்கெட்டுக்களையும் தில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 379 ஓட்டங்களை எடுத்தது. அணியின் தலைவர் ஸ்டிவன் ஸ்மித் 119 ஓட்டங்களையும், ஷான் மாஷ் 130 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் படி இரண்டாவது இன்னிங்க்சை ஆரம்பித்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்களுக்கு 347 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தது.

324 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மட்டுமே பெற்று முன்றாவது முறையாகவும் தோல்வியை சந்தித்தது. இதன்படி, முன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-0 என்ற அடிப்படையில் வெற்றியை பதிவு செய்துக்கொண்டது.

இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி 3-0 என்ற தொடர் வெற்றி பெற்றது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.