செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்!

Posted: 2016-08-19 03:52:47 | Last Updated: 2016-08-19 03:59:08
200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்!

200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்!

ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீ. ஓட்டத்தில் நடப்பு சம்பியனான ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போல்ட்.

இன்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் உசேன் போல்ட் 19.78 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக கனடாவின் டி கிரேஸ் (20.02 விநாடிகள்) வெள்ளியும், பிரான்ஸின் லெமைட்ரி (20.12 விநாடிகள்) வெண்கலமும் வென்றனர்.

2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் போல்ட், 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் 2 தங்கம் என மொத்தம் 8 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் அடுத்ததாக 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் களமிறங்கவுள்ளார் போல்ட். அதிலும் அவர் தங்கம் வெல்லும் பட்சத்தில் அந்த சாதனை ஒலிம்பிக் வரலாற்றில் உடைக்க முடியாத ஒன்றாக அமையும்.

மேற்கண்ட 3 போட்டிகளிலுமே உலக சாதனைகளும் போல்ட் வசமேயுள்ளன.