செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மஹிந்த தலைமையில் மைத்திரியின் கோட்டையை கைப்பற்றுவோம்! ஆலமரத்தை அசைக்க முடியாதாம் என்கிறார் பொது எதிரணி எம்.பி.!!

Posted: 2016-08-23 23:52:20
மஹிந்த தலைமையில் மைத்திரியின் கோட்டையை கைப்பற்றுவோம்! ஆலமரத்தை அசைக்க முடியாதாம் என்கிறார் பொது எதிரணி எம்.பி.!!

மஹிந்த தலைமையில் மைத்திரியின் கோட்டையை கைப்பற்றுவோம்! ஆலமரத்தை அசைக்க முடியாதாம் என்கிறார் பொது எதிரணி எம்.பி.!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், அடுத்து நடைபெறும் தேர்தல்களில் பொது எதிரணி வெற்றிநடை போடும் என அதன் உறுப்பினரான எஸ்.எம். சந்ரசேன எம்.பி. சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்டையான பொலனறுவை மாவட்டம் அமைந்துள்ள வடமத்திய மாகாணத்திலும் வெற்றிக் கொடி பறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மஹிந்த புதுக்கட்சிக்கு தலைமை தாங்கும் விடயத்தையும் உறுதிப்படுத்தினார்.

"அடுத்த வருடம் நாட்டுக்கு முக்கியத்துவமிக்க காலப்பகுதியாகும். மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடக்கவுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடைபெறும்.

இந்தத் தேர்தல்களில் மஹிந்த தலைமையில் வெற்றிபெறுவதற்குரிய வியூகங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் கட்சிக்கான யாப்பு உள்ளிட்ட விடயங்களும் தயார்நிலையில் இருக்கின்றன.

எனவே, அநுராபுதரம் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் பொது எதிரணி வெற்றிபெறும். குறிப்பாக வடமத்திய மாகாண சபையையும் கைப்பற்றுவோம்" என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, "நகர சபைத் தேர்தலில்கூட வெற்றிபெற முடியாதவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த பக்கம் இருப்பவர்களே கட்சிக்குள் ஆலமரங்களாக இருந்தன. எம்மை அவர்கள் நீக்கிவிட்டாலும் பலத்தைக் காட்டுவோம். ஒருபோதும் எம்மை அசைக்கமுடியாது. அரசு தேர்தலை நடத்தினால் பலத்தைக் காட்டுவோம்" என்று மஹிந்த அணியின் மற்றுமொரு எம்.பியான ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.