செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகக் குழு: சர்வதேச விசாரணையாளர்களுக்கு இடமில்லை!

Posted: 2016-08-25 00:34:24
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகக் குழு: சர்வதேச விசாரணையாளர்களுக்கு இடமில்லை!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகக் குழு: சர்வதேச விசாரணையாளர்களுக்கு இடமில்லை!

"காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய குழு முற்றிலும் உள்நாட்டு விசாரணையாளர்களை கொண்டதாகும். ஒருபோதும் அதில் சர்வதேச விசாரணையாளர்களுக்கு இடமில்லை."

- இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சர்வதேச நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படின் ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்களை இணைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டதுக்கு மஹிந்த அணியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அது தொடர்பில் விவாதிக்கவும் திருத்தங்களை முன்வைக்கவும் வராதவர்கள்தான் சட்டமூலம் அரசமைப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்" - என்றார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் குறித்த அலுவலகத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் இணைத்துக் கொளப்படுவார்களா என வினவியபோது அதற்குப் பதிலளித்த அமைச்சர், "இல்லை. இந்த அலுவலகத்திற்கு முற்றிலும் உள்நாட்டு விசாரணையாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய குழுவில் அனைவரும் உள்நாட்டவர்கள். இந்த அலுவலகத்தின் செயலாளராக மனே தித்தவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் ஏனையவர்களும் உள்நாட்டவர்கள்தான். சர்வதேச நிபுணர்களின் ஆலோசனை அவசியமாகும் பட்சத்தில் அவர்கள் ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைத்துக்கொள்ள ஏற்பாடுகள் காணாப்படுகின்றன. ஆனால், விசாரணைகள் அனைத்தும் உள்நாட்டு விசாரணையாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படும்" - என்றார்.

இதேவேளை, "காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தகவல்கள், தகவல் அறியும் சட்டமூலத்தில் பெற்றுக்கொள்ளப்படுவது வரையறைக்கு உட்படுதப்பட்டுள்ளது. ஆனால், குறித்த அலுவலகத்திற்கு தகவல் வழங்கும் ஒருவர் தமது இரகசியத்தை வெளியிட அனுமதியளித்தால் அதனை தகவல் அறியும் சட்டமூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்" என்றும் அவர் கூறினார்.