செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பரணகம குழுவின் பரிந்துரை ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது! கடுமையாக சாடுகிறது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted: 2016-08-25 00:40:02
பரணகம குழுவின் பரிந்துரை ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது! கடுமையாக சாடுகிறது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பரணகம குழுவின் பரிந்துரை ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரானது! கடுமையாக சாடுகிறது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடுமையாகச் சாடியுள்ளது.

குறிப்பிட்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் குற்றவியல் விசாரணைகளிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளதாவது:-

"இலங்கையில் காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு மனித உரிமை மீறல் குற்றசாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு பொறுப்புக்கூறல் பொதுமன்னிப்பை வழங்குமாறு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறிப்பிட்ட ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியவர்களை உள்ளூர் அதிகாரிகள் விசாரணை செய்யவேண்டும். விசேட நீதிமன்றங்களில் உள்நாட்டு நீதிபதிகளே அவர்களை விசாரணை செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிரானது. அந்தத் தீர்மானம் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், நீதித்துறையினர், விசாரணையாளர்களை அங்கீகரித்துள்ளது.

மேலும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தங்கள் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் தண்டங்களை அறவிடுவது, பதவி உயர்வை வழங்காமல் விடுவது போன்றதாகும். இலங்கை அரசு இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையதிகாரியொருவர் அரசியலற்ற அமைப்பொன்றின் முன்னிலையில் சாட்சியமளிப்பதன் மூலம் குற்ற விசாரணையிலிருந்து தப்பலாம்.

தென்னாபிரிக்காவில் பின்பற்ற இந்த முறை காலத்தால் பழையது. சர்வதேச தராதரங்களைப் பூர்த்திசெய்யாதது என்ற கருத்து காணப்படுகின்றது" - என்று கூறியுள்ளார்.