செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை!

Posted: 2016-08-26 06:51:29
பொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை!

பொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை!

பொலிவியாவின் துணை உள்துறை அமைச்சர் ரொடால்ஃபோ இலேன்ஸ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். பொலிவிய நாட்டின் தலைநகரான லா பாஸின் கிழக்கில் உள்ள பண்டுரோ என்ற இடத்தில் சாலையில் நடந்த ஒரு போரட்டத்தின் போது இலேன்ஸ் கடத்தப்பட்டார்.

புதிய சுரங்க சட்டம் தொடர்பாக அதிக அளவில் வன்முறை மற்றும் கடுமையான மோதல் ஏற்பட்டிருந்த அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்வதற்காக அங்கு சென்றார் இலேன்ஸ்.

பொலிவிய அரசு இந்த கொலையை வன்மையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் மிருகத்தனமான, கோழைத்தனமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ரேய்மி ஃபெரெய்ரா பேசுகையில், கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

முன்னதாக, போலிஸ் அதிகாரிகள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கிடையில் நடத்த மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.