செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஆட்சியை காக்க திருப்பதியானை தேடி ஓடுகிறது 'நல்லாட்சி' அரசு! விமலவீர எம்.பியின் விளாசலை ரசித்தார் மஹிந்த!!

Posted: 2016-08-27 00:10:50
ஆட்சியை காக்க திருப்பதியானை தேடி ஓடுகிறது 'நல்லாட்சி' அரசு!  விமலவீர எம்.பியின் விளாசலை ரசித்தார் மஹிந்த!!

ஆட்சியை காக்க திருப்பதியானை தேடி ஓடுகிறது 'நல்லாட்சி' அரசு! விமலவீர எம்.பியின் விளாசலை ரசித்தார் மஹிந்த!!

மக்கள் செல்வாக்கை இழந்துள்ள அரசு, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக திருப்பதி ஏழுமலையானிடம் மன்றாடி வருகின்றது எனக் சுட்டிக்காட்டி, நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமலவீர திஸாநாயக்க எம்.பிக்கு மஹிந்தவும் அவரது சகாக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

அவரது உரையை ரசித்துக் கேட்டதுடன், மேசைகளில் கைதட்டி வரவேற்பும் தெரிவித்தனர்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் ஆரம்பமானது.

சட்டமூலம் பற்றி விளக்கமளித்து அது மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் பிரதி அமைச்சர் நிமல் லன்சா. அதன்பின்னர் சுமந்திரன் எம்.பி. உரையாற்றினார்.

மஹிந்த அணியும் இஞ்சிக் குழுவும்

அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேசினார். அவர் தனதுரையின்போது மஹிந்த அணிக்கு 'இஞ்சிக் குழு' என புதிய பெயரையும் சூட்டினார்.

சபாநாயகரே, பொது எதிரணியென ஒரு கட்சி இந்தச் சபையில் இல்லை. எனவே, அவர்களை அப்படி அழைக்கக்கூடாது என்று குறிப்பிட்டதுடன், மஹிந்த அணியினரை 'இஞ்சிக்குழு', 'இஞ்சிக்குழு' என்றே அவர் விழித்தார்.

உதயகம்மன்பில தனதுரையின்போது இதற்குப் பதிலடி கொடுத்தார். வெளிவிவகார அமைச்சர், எம்மை ஏற்காவிட்டாலும், சபாநாயகர் அங்கீகரித்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிற்பகல் 1.45. மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்குள் வந்தார். அவரைச் சூழ அவரது சகாக்களான தினேஷ் குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சி.பி.ரத்நாயக்க உள்ளிட்ட எம்.பிக்களும் வந்திருந்தனர்.

விவாதத்தில் உரையாற்றாதபோதிலும், எம்.பிக்களின் உரையை செவிமடுத்துக்கொண்டிருந்த மஹிந்த, பிற்பகல் 2.05 மணியளவில் சபையிலிருந்து வெளியேறுவதற்குத் தயாரானார்.

அரசு மீது பாய்ச்சல்

அப்போது, விமலவீர திஸாநாயக்க எம்.பி. பேசுவதற்கு எழுந்ததால் ஆசனத்தில் அமர்ந்து அவரின் உரையை செவிமடுத்தார் மஹிந்த.

விமலவீர திஸாநாயக்க எம்.பி. தனதுரையின்போது கிராமத்துப் பாணியில், நல்லாட்சி அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். வெளிவிவகார கொள்கையையும் சாடினார்.

"அன்று நாங்கள் செய்ததையே இன்று இவர்கள் செய்கின்றனர். போட்டிப்போட்டுக்கொண்டு திருப்பதி செல்கின்றனர். இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. ஆகவே, ஆட்சியைக் காக்க கடவுளைத் தான் நம்ப வேண்டிய நிலை இருக்கின்றது: என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஆக்ரோஷமாக உரையாற்றிய விமலவீரவுக்கு மேசையில் கைதட்டி மஹிந்த அணி ஊக்கமும் உற்சாகமும் வழங்கியது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் உரையை முடிவுக்குக் கொண்டுவருமாறு விமலவீர எம்.பிக்கு சபைக்கு தலைமை தாங்கிய லக்கி ஜயவரதன எம்.பி. பணிப்புரை விடுத்தார். அடுத்து பேச்சாளராக அமைச்சர் ஹக்கீமுக்கும் அழைப்பு விடுத்தார்.

எனினும், விமலவீர எம்.பி. ஓயவில்லை. மஹிந்த அணி எம்.பிக்களும் எழுந்து நின்று அவருக்கு மேலும் நேரம் வழங்குமாறு கேட்டு வாதிட்டனர்.

இதையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஹில்புல்லா தனது நேரத்தில் ஐந்து நிமிடங்களை விமலவீர திஸாநாயக்கவுக்கு வழங்குவதற்கு முன்வந்தார். இதற்கு மஹிந்த அணியினர் ஹில்புல்லாவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். அந்த ஐந்து நிமிடங்களிலும் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார் விமலவீர எம்.பி.