செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காணாமல் ஆக்கப்பட்டோர் சான்றிதழ் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்! கூட்டமைப்பின் திருத்தங்களும் ஏற்பு!!

Posted: 2016-08-27 00:37:16
காணாமல் ஆக்கப்பட்டோர் சான்றிதழ் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்! கூட்டமைப்பின் திருத்தங்களும் ஏற்பு!!

காணாமல் ஆக்கப்பட்டோர் சான்றிதழ் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்! கூட்டமைப்பின் திருத்தங்களும் ஏற்பு!!

காணாமல் ஆக்கப்பட்டோரைப் பதிவு செய்வதற்கும் 'காணாத' சான்றிதழை வழங்குவதற்கும் வழிவகுக்கும் இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் விளைவாக அல்லது அதன்பின் நிகழ்வாக அல்லது அரசியல் அமைதிக்குலைவாக அல்லது குற்றவியல் குழப்பங்கள் அல்லது பலவந்தமான காணாமல் ஆக்கப்பட்டவர்களே மேற்படி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவுள்ளனர்.

அத்துடன், குழுநிலையின்போது, மேற்படி சட்டவரைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த திருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டது.

இதன்படி, இரண்டு ஆண்டுகள் என்ற காலப்பகுதி ஐந்தாண்டுகள் ஆக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்ட மரணச் சான்றிதழை மீளப்பெற்று அதற்குப் பதிலாக காணாத சான்றிதழை வழங்கும் யோசனையும் ஏற்கப்பட்டது.