செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அடக்குமுறை, வேறுபாட்டின் வெளிப்பாடே இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் விளக்கம்

Posted: 2016-09-07 02:48:12
அடக்குமுறை, வேறுபாட்டின் வெளிப்பாடே இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் விளக்கம்

அடக்குமுறை, வேறுபாட்டின் வெளிப்பாடே இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் விளக்கம்

மலேசியாவிற்கான இலங்கைத்தூதுவர் மீதான திடீர் தாக்குதலானது தீவிரவாதச் செயல் இல்லை. அது அரசியல் ரீதியான அடக்குமுறை மற்றும் வேறுபாட்டின் விளைவே என மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மலேசியத் தலைநகரில் விமான நிலையத்தில் வைத்து இலங்கைத் தூதுவர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐவரைக் கைது செய்து மலேசியப் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்த போது நூற்றுக்கும் அதிகமானோர் வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மலேசிய பிரதி உள்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் முன்னர் கைது செய்யப்பட்ட விடயத்தில் இப்ராஹிம் அன்சர் மும்முரமாகச் செயற்பட்டார். இதன்விளைவாகவே இத்தாக்குதல் எனக் கூறினார்.

இத்தாக்குதல் நடவடிக்கை இலங்கை மலேசிய இராஜதந்திர உறவுகளில் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.