செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! - சபையில் சம்பந்தன் வலியுறுத்து

Posted: 2016-09-07 03:12:43
இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! - சபையில் சம்பந்தன் வலியுறுத்து

இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! - சபையில் சம்பந்தன் வலியுறுத்து

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் அன்ஷார் மீதான தாக்குதலை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் இலங்கையர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபையில் நேற்றுக் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் கூறியவை வருமாறு:-

"தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இலங்கையர்கள் கிடையாது என்று பிரதமர் கூறினார். ஆயினும்கூட அவ்வாறானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்.

நாடு தற்போது ஸ்திரதன்மையையும் ஒற்றுமையையும் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படியான சம்பவங்கள் அநாவசியமானவை. இதன் பின்விளைவுகள் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று புரியாத ஆட்களின் முட்டாள்தனமாக செயற்பாடுகளை ஊக்குவிக்கப்படக்கூடாது. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ஸ்திரமின்மையும் பதற்றமும் எந்நேரத்திலும் மோதல்களை உருவாகக்கூடிய நிலைமையும் இருக்க வேண்டும் என்பதே இந்த மாதிரியானவர்களின் தேவையாக இருக்கின்றது. இவை அனைத்தும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே தவிர இந்த நாட்டின் நன்மைக்காகக் கிடையாது. இந்த நபர்களின் தேவைக்கேற்ப செயற்படுமளவுக்கு யாரும் முட்டாள்களாக இருக்கவேண்டும் என்று நான் கருதவில்லை. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்துமாறு அரசை வலியுறுத்துகிறோம்" - என்றார்.