செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழ்ப்பாணத்தில் கம்பன் விழா செப். 15 தொடக்கம்18 வரை நடைபெறும்!

Posted: 2016-09-07 04:41:11
யாழ்ப்பாணத்தில் கம்பன் விழா செப். 15 தொடக்கம்18 வரை நடைபெறும்!

யாழ்ப்பாணத்தில் கம்பன் விழா செப். 15 தொடக்கம்18 வரை நடைபெறும்!

உலகக் கவிஞன் கம்பனின் பெயரால் கடந்த 37 ஆண்டுகளாக இயங்கிவரும் அகில இலங்கைக் கம்பன் கழகம் இவ்வாண்டுக்கான 'கம்பன் விழா"வை எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக் கிழமை தொடக்கம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான நாட்களில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவென தமிழகத்திலிருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் பேராசிரியை இரா. ருக்மணி, பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், புலவர் இரெ. சண்முகவடிவேல் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

இவ்வாண்டுக் கம்பன் விழாவின் திருநாள் மங்கலம், 15 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கே. ஆர். சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கல இசையுடன் வைத்தியநிபுணர் எஸ்.பிரேமகிருஷ்ணா தம்பதியர் மங்கல விளக்கேற்றி வைக்க ஆரம்பமாகும்.

இவ்விழாவில் நல்லை ஆதீன சுவாமிகள், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சேவியர் செமினரி விரிவுரையாளர் வண. ரி.ரவிராஜ் அடிகளார், ஜூம்மா பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் மௌலவி அப்துல் சமத் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் ஆசியுரை வழங்கவர்.

யாழ் மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைப்பார். அன்றைய விழாவின் தொடக்கவுரையை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆற்றுவார்.

தொடர்ந்து, கம்பவாரிதி இ. ஜெயராஜ் எழுதிய அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் 1980 -1995 காலப்பகுதி வரலாற்றைக் கூறும் ‘உன்னைச் சரணடைந்தேன்’ நூலும்;, 2015 இல் நடைபெற்ற யாழ்க் கம்பன் விழா மற்றும் 2016ல் நடைபெற்ற இசைவிழா இறுவட்டுக்களும் வெளியிடப்படும்.

இவற்றின் முதற் பிரதிகளை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.பாலகுமார், பேராசிரியர் மா.வேதநாதன், மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர் பெற்றுக் கொள்வர். தொடர்ந்து, அன்றைய நிகழ்ச்சியாக, ‘அன்பின் உச்சமென அறிஞர் பெரிதும் உவப்பது எது?’ எனும் தலைப்பில் இலக்கிய ஆணைக்குழு நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாள் காலை, யாழ். இந்துக்கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா அவர்கள் மங்கல விளக்கேற்ற, பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைப்பார். அன்றைய விழாவின் தொடக்கவுரையை வட மாகாண சபை முதல்வர் சீ.வீ.கே.சிவஞானம் ஆற்றுவார்.

பின் பேராசிரியை இரா.ருக்மணியின் தனியுரையும் தொடர்ந்து புலவர் இரெ.சண்முகவடிவேல் தலைமையில் ‘இராம காதைக்கு ஏற்றம் தரும் இணையற்ற துணைப்பாத்திரம் எது?’எனும் தலைப்பில் சுழலும் சொற்போரும் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாள் மாலை, திரு.வி.சித்தார்த்தன் திரு.வி.பிரதித்தன் குழுவினரின் மங்கல இசையுடன், ஹரிகணன் அச்சக அதிபர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கல விளக்கேற்ற, யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைப்பார். தொடக்கவுரையை வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆற்றவுள்ளார்.

பின் ‘கிஷ்கிந்தையின் பேராளுமை எனும் பெருமைக்குப் பெரிதும் பொருந்துபவர் யார்?’ எனும் தலைப்பில் பேராசிரியை இரா.ருக்மணி தலைமையில் பட்டி மண்டபம் இடம்பெறும். மூன்றாம் நாள் காலை ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆ. ஸ்ரீஸ்கந்தமூர்த்தி மங்கல விளக்கேற்ற, யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். தொடக்கவுரையை கவிஞர் சோ. பத்மநாதன் ஆற்றவுள்ளார்.

பின் பேராசிரியர் அரங்க.இராமலிங்கத்தின் தனியுரையும் ‘ஆ! எங்கள் கம்பனது அற்புதமாம் விருத்தம்போல் பா வடிவம் பலவெடுத்து படும்பாட்டை உரைக்கின்றோம்..’ எனும் தலைப்பில் கவியரங்கமும் இடம்பெறவுள்ளன.

மூன்றாம் நாள் மாலை பி.எஸ்.பாலமுருகன் குழுவினரின் மங்கல இசையுடன் தினக்குரல் பத்திரிகை நிறுவுநர் எஸ்.பி.சாமி தம்பதியர் மங்கல விளக்கேற்ற, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரி.சத்தியமூர்த்தி தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். தொடக்கவுரையை வட மாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆற்றவுள்ளார். பின் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் உரையரங்கும், ‘இன்று சந்திக்கும் இவர்கள்’ எனும் பொருளில் நாடக அரங்கும் இடம்பெறவுள்ளன.

நான்காம் நாள் காலை, யாழ். வீரகேசரி முகாமையாளர் இரா.ரவீந்திரன் மங்கல விளக்கேற்ற, பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைப்பார். தொடக்கவுரையை ஓய்வுபெற்ற அதிபர் க.அருந்தவபாலன் அவர்கள் ஆற்றவுள்ளார். பின் பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் அவர்களின் தலைமையில் ‘கம்ப கடலில் சங்க முத்துக்கள்’ எனும் தலைப்பில் ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது.

நான்காம் நாள் மாலை, பி.ரஜீந்திரன் குழுவினரின் மங்கல இசையுடன், வலம்புரி பத்திரிகை நிர்வாக இயக்குநர் சி.வெற்றிவேலாயுதம் மங்கல விளக்கேற்ற, மொரீசியஸ் நாட்டுக்கான முன்னாள் தூதுவரும் கொழும்புக் கம்பன் கழக தலைவருமான தெ.ஈஸ்வரன் அவர்கள் தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். தொடக்கவுரையை வடமாகாணசபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆற்றவுள்ளார். பின் குற்றக்கூண்டில் கும்பகர்ணனை நிறுத்தும் வழக்காடு மன்றம் இடம்பெறவுள்ளது.

நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிரபல அறிஞர்கள், கவிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தக பெருமக்கள் முதலிய பெரியோர்கள் பலரும் இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து கொள்கின்றனர். கம்பவாரிதி இ. ஜெயராஜ், ‘சொல்லின் செல்வர்’ இரா. செல்வவடிவேல், கலாநிதி ஆறு.திருமுருகன், ‘தமிழருவி’ த.சிவகுமாரன், பேராசிரியர் வேல்நம்பி, கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், சிதம்பரப்பிள்ளை சிவகுமார், ந. விஜயசுந்தரம், கவிஞர் த. ஜெயசீலன்;, கவிஞர் த. சிவசங்கர், கவிஞர் த.நாகேஸ்வரன், கவிஞர் நாக.சிவசிதம்பரம், ச. மார்க்கண்டு, எம்.எஸ்.ஸ்ரீதயாளன், சி.கேசவன், இ.சர்வேஸ்வரா, அ. வாசுதேவா, லோ.பிரசன்னவருண், லோ.துஷிகரன், த.கருணாகரன், செ.மதுரகன், ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ, செ.சொபிசன் முதலிய பலரும் இவ்வாண்டு விழாவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் தவிர வெளிநாடுகளில் உள்ள நம்நாட்டு அறிஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கின்றனர். இசைக்கலைஞர்களான வாசஸ்பதி ரஜீந்திரன், பி. ஹம்சத்வனி, அ.சுகன்யா, ம.தயாபரன், ப.சிவமைந்தன், எம்.கலைச்செல்வன், பா.தரங்கிணி ஆகியோர் கடவுள் வாழ்த்து இசைக்கவுள்ளனர். கம்பன் விழா நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் நிகழ்த்திட்டமிடப்பட்டுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து விழாவைச்சிறப்பிக்க வேண்டப்படுகின்றனர்.