செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பேராறு குடிநீர் திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு காணிகளை உடன் வழங்குக! வவுனியா போராட்டத்தில் கோரிக்கை!!

Posted: 2016-09-07 05:03:29
பேராறு குடிநீர் திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு காணிகளை உடன் வழங்குக! வவுனியா போராட்டத்தில் கோரிக்கை!!

பேராறு குடிநீர் திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு காணிகளை உடன் வழங்குக! வவுனியா போராட்டத்தில் கோரிக்கை!!

வவுனியா நகருக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக செயற்படுத்தப்பட்டு வருகின்ற பேராறு குடிநீர்த்திட்டத்தில் முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கைக் காணிகளை இம்மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இம்மாதம் 30 ஆம் திகதிக்கிடையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இது விடயத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாடப் போவதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த குடிநீர்த்திட்டத்தினால் தமது காணிகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணியாகச் சென்று வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ள மகஜரிலேயே இந்தக் கோரிக்கையும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பேராறு நீர்த்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை காலை வவுனியா பிரதேச செயலகத்திற்கு எதிரில் இருந்து கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் பேரணியாகப் புறப்பட்டு வவுனியா அரச செயலகத்தைச் சென்றடைந்து அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமாரவிடம் தமது மகஜரைக் கையளித்திருக்கின்றனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பேராறு நீர்விநியோகத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு மாற்றுக்காணிகள் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் சில முக்கிய விடயங்களை தங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், இது விடயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வவுனியா நகரத்திற்குக் குடிநீர் வழங்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பேராறு நீர்விநியோகத்திட்டம் க்டந்த 2007ஆம் ஆண்டளவில் முன்மொழியப்பட்டது.

இதனையடுத்து, 2010ம் ஆண்டு முழுவீச்சுடன் அதன் ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த திட்டத்திற்காக விவசாயிகள் பயிர் செய்து வந்த சுமார் 167 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்களையும், மேட்டுக் காணிகழளயும் சுவீகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இது பேரிடியாக அமைந்ததனால், ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வேறுவழியில்லாமல் தங்கள் காணிகளை இந்த குடிநீரத் திட்டத்திற்கு விட்டுக் கொடுப்பதற்கு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டனர்.

இதன்மூலம் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பில் மூன்று கமக்காரர் அமைப்புகளும், வவுனியா பிரதேச செயலாளரும், நீர்வழங்கல் வடிகாலமைப்பபுச் சபையும் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஓப்பந்தத்தின் பிரகாரம் பலவிடயங்கள் சம்மந்தப்பட்ட தரப்பினரால் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும்; முக்கியமான விடயமான மாற்று வயற்காணிகள் வழங்குவது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் இதுவரை செய்து முடிக்கப்படவில்லை.

ஓப்பந்தத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு சமமான தன்மையுடைய, பாயிர்ச்செய்கைக்கு தயார்ப்படுத்தப்பட்ட வயற்காணிகள் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தும் மூன்று வருடங்கள் கடந்து, 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதமாகிவிட்ட போதிலும் 20 வீதமான காணிகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகுதி 80 வீதமான வயற்காணிகள் இதுவரை பயிர்ச்செய்கைக்காக தயார்படுத்தப்படாமல் அலங்கோலமாகவும், பற்றைகள் அடர்ந்த காடாகவுமே காணப்படுகின்றது.

அத்துடன் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாற்றுக் காணிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் (மானிய பத்திரம்) வழங்கப்படுமென உறுதியளிக்கப்டடிருந்த போதும் 2015 ஆம் ஆண்டுடன் காலாவாதியாகின்ற தற்காலிக அனுமதிப்பத்திரமே தற்போது விவசாயிகளிடம் உள்ளது.

இந்த வியடங்கள் தொடர்பில் மாவட்ட ஒருங்கணைப்புக்குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்போதும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமலுள்ள விடயங்களான பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்தப்பட்ட வயற்காணிகள் மற்றும் மாற்றுக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரம் என்பவற்றை இம்மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட தரப்புகளால் வழங்கப்படாவிட்டால், ஒப்பந்தத்தின் பிரகாரம் நீதிமன்ற உதவியை நாடுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம் - என்றுள்ளது.