செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

விரைவில் இலங்கை வருகிறார் மோடி !

Posted: 2016-09-07 06:48:18
விரைவில் இலங்கை  வருகிறார் மோடி !

விரைவில் இலங்கை வருகிறார் மோடி !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவின் முழுமையான நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஹற்றன்-டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையைத் திறந்து வைக்கவே இந்திய பிரதமர், இலங்கை வரவுள்ளார். அடுத்த வருடம் வெசாக் போயா தினம் அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் குறித்த மருத்துவமனை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பீ.நடா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்று வரும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் 69 ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்திருக்கும் இந்திய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சுகாதார பிரதிநிதிகளுடன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதே மோடியின் வருகை குறித்து அங்கு அறிவிக்கப்பட்டது.