செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பூநகரியில் 490.1 கிலோமீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைக்கவேண்டும்

Posted: 2016-09-07 10:55:28
பூநகரியில் 490.1 கிலோமீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைக்கவேண்டும்

பூநகரியில் 490.1 கிலோமீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைக்கவேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்தில் 490.1 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் புனரமைக்கப்படவேண்டிய நிலையிலுள்ளனவாக பூநகரி பிரதேச செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியில் 612.64 கிலோ மீற்றர் நீளமான 435 உள்ளக வீதிகள் உள்ளன. இவற்றில் 122.54 கிலோமீற்றர் நீளமான 48 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மிகுதி 490.1 கிலோ மீற்றர் 387 வீதிகள் புனரமைக்கப்படவேண்டிய நிலையிலுள்ளன.

குறிப்பாக பூநகரி - பரந்தன் வீதியிலிருந்து கறுக்காய் தீவு செல்லும் வீதி புனரமைக்கப்படாமையினால் பெருமளவான குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இதேபோன்று, வினாசியோடை, கௌதாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பிரதான வீதிகளும் மிகமோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனால் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் ஏராளமான குடும்பங்கள் தமது போக்குவரத்துக்களில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

இந்த வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு அவர்கள் அரச அதிகாரிகளிடம் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.