செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை! பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 2016-09-08 03:12:33 | Last Updated: 2016-09-08 03:15:32
துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை! பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை! பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் ஐவர் நிரபராதிகள் எனக் கருதப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஏனைய எண்மரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதில் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட அனுர துஷார டிமெல், சமிந்த ரவி என அழைக்கப்படும் தெமட்டகொட சமிந்த, சரத் பண்டார மற்றும் பிரயந்த ஜானக பண்டார ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.