செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பாரத கொலை வழக்கு தீர்ப்பால் ஹிருணிகா எம்.பி. மகிழ்ச்சி

Posted: 2016-09-08 04:34:35
பாரத கொலை வழக்கு தீர்ப்பால் ஹிருணிகா எம்.பி. மகிழ்ச்சி

பாரத கொலை வழக்கு தீர்ப்பால் ஹிருணிகா எம்.பி. மகிழ்ச்சி

தனது தந்தையின் ஆன்மா இன்று சாந்தியடையும் எனத் தெரிவித்திருக்கிறார் நாடளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மனின் மகளுமான ஹிருணிகா.

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது. இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஹிருணிகா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “எனது தந்தை உயிரிழந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ஒரு நியாயமான தீர்ப்பு நல்லாட்சியின் மூலம் கிடைத்துள்ளது. தந்தையின் மரணத்திற்குப் பின்னர் நானும் எனது தாயும் இரவில் நித்திரையின்றி துன்பத்தில் தத்தளித்தோம், இந்தத் தீர்ப்புக்காக 5 வருடங்கள் காத்திருந்தோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி நான் கவலையடைகின்றேன், ஆனால் ஒரு கொலைக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். தந்தையின் மரணத்திற்கு பல ஊடகங்கள் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருசில ஊடகங்கள் எதிரான கருத்துக்களை முன் வைத்திருந்தன, ஆனால் என்னுடன் எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் கண்ணீருடன் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முதன்முறையாக ஒரு கொலைக் குற்றத்திற்கு தெளிவான நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இன்று எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடையும் என நான் நம்புகின்றேன்.

எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் சார்பிலும் எனது குடும்பத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” - என்றார்.