செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஐ.நா. சபை உருவாக்கத்துக்கான சாசனம் சமஸ்கிருதத்தில்!

Posted: 2016-09-08 06:04:54 | Last Updated: 2016-09-08 06:49:57
ஐ.நா. சபை உருவாக்கத்துக்கான சாசனம் சமஸ்கிருதத்தில்!

ஐ.நா. சபை உருவாக்கத்துக்கான சாசனம் சமஸ்கிருதத்தில்!

ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்த சாசனம் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பரு தீன் தனது டுவிட்டரில், "சாசனம் தற்போது சமஸ்கிருத மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அரும்பாடுபட்ட ஜிதேந்திர குமார் திரிபாதிக்கு நன்றிகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிதேந்திர குமார் திரிபாதி, லக்னோவைச் சேர்ந்த அகில பாரதிய சம்ஸ்கிருத பரிஷத் தின் செயலர் என்பது குறிப்பி டத் தக்கது. அமெரிக்காவின் பிரான்ஸிஸ்கோ நகரில், சர்வ தேச அமைப்பை உருவாக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1945ஆம் ஆண்டு ஒக் ரோபர் 24ஆம் திகதி நடைபெற்றது.

இதில், ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்காக சர்வதேச நாடுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தம், சாசனமாக இயற்றப்பட்டது. இந்த சாசனம் இதுவரை ஐ.நாவின் 6 அதிகாரபூர்வ மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சமஸ்கிருதத்திலும் வெளியிடப் பட்டுள்ளது என்பது குறிப் பி டத்தக்கது.