செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அறிவுக்கண் ஆயிரம் நூல் வெளியீட்டு விழா

Posted: 2016-09-08 12:23:46
அறிவுக்கண் ஆயிரம் நூல் வெளியீட்டு விழா

அறிவுக்கண் ஆயிரம் நூல் வெளியீட்டு விழா

ஆய்வு எழுத்தாளரான கல்முனை எம். ஐ. றபீக்கின் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்திருக்கின்ற அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

சட்டத்தரணி அன்பு முகைதீன் றோஷன் அக்தர் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதிகளாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை டாக்டர் யூ.எல். சறாப்தீன், முன்னாள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர், முன்னாள் பிரதி அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி, எஸ். எச். அப்துல் அஸீஸ், முன்னாள் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத், தமிழ் மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்), அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், முன்னாள் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன், டாக்டர் கே.எல்.எம். றயீஸ் ஆகியோர் கலந்துகொள்வர்.