செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டம் முடிவு

Posted: 2016-09-08 13:36:28 | Last Updated: 2016-09-08 13:52:57
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டம் முடிவு

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டம் முடிவு

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்றுவந்த மாணவிகளின் போராட்டம் இன்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது. மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வுகாண உதவினார்.

மேற்படி கல்லூரியில் அதிபராக இருந்த சிராணி மில்ஸ் 60 வயதை அடைந்த காரணத்தால் அவரை பணியில் இருந்து நிறுத்தி புதிய அதிபர் ஒருவரை நியமிக்க கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகளும் பெற்றோரும் கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, பழைய அதிபரின் பதவிக் காலம் நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து புதிய அதிபராக நியமிக்கப்பட்ட பற்ரீசியா சுனித்தா கல்லூரியில் பதவியேற்கச் செல்ல முடியாத நிலையில், வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்திய திருச்சபையில் பதவியேற்றார்.

ஆயினும் போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று நேரடியாக கல்லூரிக்குச் சென்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் கல்லூரியின் புதிய, பழைய அதிபர்கள், ஆளுநர் சபை நிர்வாக அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியானார்.

அப்போது, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக தனது பொறுப்புக்களை ஒப்படைப்பதாக பழைய அதிபர் சிராணி மில்ஸ் தெரிவித்ததை தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாடசாலையை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்காக ஆரம்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.