செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நொச்சிமுனையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! சந்தேகத்தில் மனைவி கைது

Posted: 2016-09-09 00:53:01
நொச்சிமுனையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! சந்தேகத்தில் மனைவி கைது

நொச்சிமுனையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! சந்தேகத்தில் மனைவி கைது

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைக் கிராமத்தில் நேற்று அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

வெள்ளைத்தம்பி மகேஸ்வரன் (வயது - 26) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அதேவேளை, இவரது மனைவியான மகேஸ்வரன் சிந்து (வயது - 26) நஞ்சு அருந்திய நிலையில் நேற்று அதிகாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், பின்னர் அவர் கொலைச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர் பொலிஸாரின் கண்காணிப்புடன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் கூறினர்.

"நொச்சிமுனைக் கிராமத்திலுள்ள வீடொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று சடலத்தை மீட்டோம். சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன" என்று பொலிஸார் கூறினர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் முடித்து ஒரு வருடமாவதுடன், நொச்சிமுனைக் கிராமத்தில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் இல்லை என்பதுடன் இவர்கள் இருவருக்குமிடையில் அவ்வப்போது தகராறு இடம்பெற்று வந்துள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர்களின் வீட்டில் அவ்வப்போது சண்டை பிடிக்கும் சத்தம் கேட்பதுடன், வழமைபோன்று நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டது எனவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.