செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சம்பூரில் சிறுமி சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!!

Posted: 2016-09-09 00:58:08
சம்பூரில் சிறுமி சடலமாக மீட்பு!  பொலிஸார் தீவிர விசாரணை!!

சம்பூரில் சிறுமி சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் - நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனும் சிறுமியே காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

நேற்றுக் காலை 9 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி, காணாமல்போயுள்ளார் எனத் தெரியவந்ததையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்தைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.

சிறுமியை துஷ்பிரோகம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் கிராம மக்கள் சந்தேகிக்கின்ற நிலையில், சந்தேகத்திற்குரிய இளைஞரும் தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் சம்பூர் பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர்.