செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கைவிடப்பட்டது பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted: 2016-09-09 01:54:35
கைவிடப்பட்டது பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

கைவிடப்பட்டது பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்றுமுன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை மூன்று மாதங்களுக்குள் மீளப் பெற்றுக்கொடுப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைபேசியில் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமையாளர்களுடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிடுவதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா உறுதியளித்துள்ளார்.