செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா

Posted: 2016-09-09 12:52:01
மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா

மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவுடன் சிறைக்கூடத்;திற்குள் செல்லாமல் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் சென்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே வெளியே வந்தார் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் கைதிகளுக்கான உடை வழங்கப்பட்டதாகவும் அதனை அவர் அணியாமலேயே சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் சென்று தங்கியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உடற்பயிற்சிக்கான நேரத்தின் போது துமிந்த சில்வா சக கைதிகளுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அவர் கொழும்பு - வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு யின் சீ-3 அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை, பீ-3 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட துமிந்த சில்வாவுக்கு கைதிகள் அணிய வேண்டிய ஆடையை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கி அவரது சிறைக்கூடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர் அந்தச் சிறைக்கூடத்துக்குச் செல்லாமல் நேரடியாக சிறைச்சாலைக் கண்காணிப்பாளரின் அலுவலகத்துக்கே சென்றுள்ளார். அங்கிருந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே வெளியே வந்துள்ளார் என்றும் அதன் பின்னரே அவர் தனது சிறைக்கூடத்துக்குச் சென்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரோ வேறு எந்தக் கைதியுமோ சிறைச்சாலைக்குள் வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதியில்லை என்றும் அவ்வாறு சென்றால் அது பாரிய குற்றமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.